கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!
Kanniyakumari district school holiday due to heavy rain
தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல சுழற்சி காரணமாக என்ற கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மதுரையில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக மதுரையின் பல பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அதிக கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kanniyakumari district school holiday due to heavy rain