விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு - கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் விவசாயிகள் வேளாண் பெருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டம் நடத்தும் விவசாயிகளை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் அவர்களை கலைத்து வருகின்றனர். 

இந்நிலையில் தி.மு.க எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். 

அவர்கள் குற்றவாளி இல்லை. விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது ஏற்க முடியாதது. போலீசாரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi MP condemnation tear gas shelling farmers


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->