பிறந்து 3 நாட்களான தனது பிஞ்சு குழந்தையை பார்க்க சென்ற தந்தை விபத்தில் மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


மனைவி, குழந்தையை நேரில் பார்க்க சென்ற சென்ற இளைஞர் அரசு பேருந்து மோதி பலியான சோகம் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு சாலைத்தெரு பகுதியை சார்ந்தவர் சுந்தர் ராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் செவிலிமேடு அருகேயுள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நளினி. இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில், கார்த்திக் - நளினி தம்பதியினருக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று மாலை தனது மனைவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து, மாமியாரின் வீட்டிற்கு குழந்தை மற்றும் மனைவியை அழைத்து சென்று விட்டுள்ளார். 

பின்னர், செவிலிமேட்டில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்ற கார்த்திக், மீண்டும் இரவு நேரத்தில் மனைவி மற்றும் மகளை பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் கார்த்திக் ஜெம் நகர் அருகே செல்கையில், எதிர்திசையில் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை வழி சேலம் செல்லும் அரசு பேருந்து, கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. 

இந்த விபத்தில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கார்த்திக்கின் மீது அரசு பேருந்து ஏறி இறங்கவே, கார்த்திக் உயிருக்கு போராடி துடித்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் அரசு பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும், அரசு பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருகிறது. அரசு பேருந்து அதிவேகத்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

பிஞ்சு குழந்தை, அன்பு மனைவியை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலியான சோகம் கண்கலங்க வைத்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanchipuram Govt Bus Two Wheeler Accident Youngster Died Family Relations Feeling sad


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->