உதயநிதி என்ற குழந்தையை போட்டு தர்ம அடி அடிக்கின்றனர் - கமல்ஹாசன் கமாண்டுக்கு உதயநிதி ரியாக்ஷன்! - Seithipunal
Seithipunal


சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதியின் இந்த மத வெறுப்பு கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், திமுக இணைந்துள்ள ஐஎன்டிஐ கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகள் கூட, உதயநிதி பேச்சிக்கும் எங்களுக்கும் (கூட்டணிக்கும்) எந்த சம்பந்தமும் இல்லை என்று நழுவி விட்டன.

இந்த நிலையில், நேற்று கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் தலைவர் கமலஹாசன், "சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி என்ற குழந்தையை போட்டு தரும் அடி அடிக்கின்றனர்.

சனாதனம் என்ற வார்த்தையை நான் பெரியார் மூலமாகவே அறிந்தேன். பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னவர் மட்டுமல்ல, உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு காசியில் பூஜை செய்து கொண்டிருந்தவர்.

அவரே அத்தனையும் வெறுத்துவிட்டு இப்போது அதனை எதிர்க்கிறார் என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

பெரியாரை திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளும் உரிமை கொண்டாட முடியாது. பெரியாரை தமிழகமே உரிமை கொண்டாட வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக கமலஹாசன் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், கமலஹாசன் தங்கள் சனாதன கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்க, அதற்கு உதயநிதி ஸ்டாலின், 'அவரின்ஆதரவுக்கு நன்றி' என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhaasan Say About Udhay And Sanatana


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->