''நான் அவரது இழப்பை எண்ணிப் பார்க்கவில்லை; நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்''; கமல்ஹாசன் வேதனை..!
Kamal Haasan expresses deep gratitude to director Bharathiraja
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று தனது 84 வயதில் அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது;
''அந்த நற்பண்பாளர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். ஆனால், அவரது நட்பு தொடரும்; அவரது கலை என்றும் நிலைத்திருக்கும். நான் அவரது இழப்பை எண்ணிப் பார்க்கவில்லை; மாறாக, அவர் ஈட்டிய நன்மைகளையே கணக்கில் கொள்கிறேன். அவர் நம்மிடையே இருந்தார்; என்னுடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்கினார்; அதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kamal Haasan expresses deep gratitude to director Bharathiraja