அதிசயம்….! அபூர்வம்….! துாத்துக்குடி கடற் கரையோரமாக இறந்து கிடந்த கடல் கன்னி….!
அதிசயம்….! அபூர்வம்….! துாத்துக்குடி கடற் கரையோரமாக இறந்து கிடந்த கடல் கன்னி….!
அதிசயம்….! அபூர்வம்….! துாத்துக்குடி கடற் கரையோரமாக இறந்து கிடந்த கடல் கன்னி….!
கடல் கன்னிகளைப் பற்றிக் கதைகளில் படித்திருப்போம். பல திரைப்படங்களில் கிராபிக்சாக வெளியிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், துாத்துக்குடியில் ஒதுங்கிய கடல் கன்னியின் அபூர்வ புகைப்படம் கிடைத்துள்ளது.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் தெற்குப் பகுதியில் வசித்து வருகிறார், முக்தீசுவரன் (வயது 42). தனியார் நிறுவனம் ஒன்றில், செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய தாத்தா சப்பாணி முத்துத் தேவர், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலே, ராணுவத்தில் பணி புரிந்தவர். பர்மாவிலும், சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். பின், இவரைத் துாத்துக்குடிக்கு பணி மாற்றம் செய்தனர் ஆங்கிலேயர்கள்.
அப்போது, துாத்துக்குடி துறைமுகத்தைக் கண்காணிக்கும் தலைமைப் பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப் பட்டது. இதற்காக, அவருக்கு, பைனாகுலர் மற்றும், கருப்பு வெள்ளையில் படம் பிடிக்க கூடிய கேமரா ஒன்றும், கொடுக்கப் பட்டது.
இந்த நிலையில், ஒரு நாள், காலையில், சப்பாணி முத்து தேவர், கடற்கரையோரம் நடந்து ரோந்துப் பணி மேற் கொண்டிருந்த போது, கரையோரமாக ஒதுங்கிய பெரிய அளவிலான மீனைக் கண்டார்.
அதனை அருகில் சென்று பார்த்தவர், ஆச்சர்யத்தில் அசந்து போனார். ஏனென்றால், அது உடல் முழுக்க மீனாகவும், கீழே, அழகிய பெண்ணின் முழு அளவிலான இரண்டு கால்களையும் கொண்டிருந்தது. அந்தக் கால்கள், சராசரியான ஒரு பெண்ணிற்கு இருக்கும் அளவில் இருந்துள்ளது.

அந்தக் காலின் விரல்கள் எல்லாம், பெண்ணிற்கு இருப்பது போன்று, ஒவ்வொரு காலிலும் ஐந்து விரல்கள் இருந்தன.
இதனை அதிசயமாகக் கண்ட அவர், உடனே, தன் கையில் வைத்திருந்த கேமராவில், படம் எடுத்தார். பின், ஆங்கிலேய அதிகாரிகளிடம் சென்று சொன்ன போது, அவர்களும் வந்து அதிசயத்துடன் பார்த்துள்ளனர். இந்த செய்தி பரவி, துாத்துக்குடி பகுதியில் வசித்த மக்கள் எல்லாம், அந்த மீன் கன்னியை, ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். பின் அந்த அதிசய மீனைப் புதைத்து விட்டனர்.
பின், சப்பாணி முத்துத் தேவர், ஓய்வு பெற்றதும், தன்னிடம் பத்திரமாக இருந்த அந்த மீன் கன்னியின் புகைப்படம், விசில், மற்றும் அவர் பயன் படுத்திய பொட்களை எல்லாம், தன் பேரன், முக்தீசுவரனிடம் பத்திரப்படுத்தச் சொல்லிக் கொடுத்துச் சென்றுள்ளார்.
அதைத் தான் முக்தீசுவரன் பத்திரமாக வைத்துள்ளார். அவருடைய பாட்டி, அதாவது, சப்பாணி முத்துத் தேவரின் மனைவி, இன்னும், உயிருடன் தான் உள்ளார். அவர் தன் கணவர் சொல்லிய விபரங்களை எல்லாம், உருக்கத்துடன் சொல்கிறார்.
மேலும், தகவல் அறிய, 94863 64385 என்ற எண்ணில் முக்தீசுவரனைத் தொடர்பு கொண்டு பேசலாம்!
மதுரை ராஜா -