தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு மிகக் குறுகிய நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, கேரளாவில் இருந்து விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வந்த ஜே.பி.நட்டா இன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிதம்பரம் செல்கிறார்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் கரூர் சென்று, கரூர் பா.ஜனதா வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

இதைத் தொடர்ந்து, விருதுநகர் செலும் ஜே.பி நட்டா, பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு, திருச்சி வருகை தந்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்கிறார். இவையனைத்தையும் முடித்துவிட்டு இரவு7 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jp natta election campaighn in tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->