படிக்கட்டு பயணம்...நொடியில் முடிந்த ஆயுள்...! மதுரையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பரிதாப பலி...!
journey up stairs life ended second passenger fell from moving train Madurai and died tragically
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள நெடுங்குளம் ரெயில்வே கேட் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் சிக்கி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக ரெயில்வே காவலர்களுக்கு தகவல் சென்றது. இதையடுத்து ரெயில்வே காவலர் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர்.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தென்காசி மாவட்டம் குருவங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தனது உறவினருடன் சென்னையிலிருந்து நெல்லை நோக்கிச் செல்லும் விரைவு ரெயிலில் பயணம் செய்திருந்தது தெரியவந்தது.
குருவங்கோட்டையில் நடைபெறவிருந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த சுதர்சன் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.இதில் வேகமாக சென்ற ரெயிலில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக காவலர்கள் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
journey up stairs life ended second passenger fell from moving train Madurai and died tragically