ஆம்புலன்சில் பணிபுரிய இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஆம்புலன்சில் பணிபுரிய இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.!

தமிழகம் முழுவதும் செயல்படும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. 

இடம் : திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,

மருத்துவ உதவியாளருக்கு தேவையான தகுதிகள்:-

Bsc Nursing, GNM , ANM, DMLT,  LIFE SCIENCE -- Bsc Zoology, Botany, Bio Chemistry, Microbiology Biotechnology , Plant Biology இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் :- ரூபாய் 15,435 

வயது:- 19 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:- எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. 

இந்தத் தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி காலத்தில் தங்கும் வசதியும் செய்து தரப்படும்.

ஓட்டுநருக்கான தகுதிகள்:-

ஓட்டுநராக பணிபுரிய விரும்புவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது : 24 - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் . 

உயரம் :- 162.5 cm 

விண்ணப்பதாரர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகளும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

மாத ஊதியம் :- ரூபாய் 15,235 

தேர்வு முறை : எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.

இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு விவரங்களை அறிந்துகொள்வதற்கு 7397724822,7397724853,7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job wanted for ambulance driver and Medical Assistant in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->