அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? - செல்வபெருந்தகையின் தகவலால் திமுக அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்து இதுவரையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உறுதியாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பத்து தொகுதிகளை வழங்கிய திமுக, அகில இந்திய அளவில் எந்த கட்சியும் முன் வராத நிலையிலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. 

ஆனால், இந்தமுறை இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. அதற்கும் ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போன்று பத்து இடங்களை திமுக ஒதுக்காது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.  

காங்கிரஸ் தரப்பில் 15 தொகுதிகளைக் கேட்பதால், ஏழு இடங்கள் வரையிலுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று திமுக சொன்னதால் காங்கிரஸ் கட்சி பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் நேரடியாகவே கூறினார் என்றும், திமுகவுடன் நாங்கள் தோழமையுடன் இருக்கிறோம், நட்புடன் இருப்பதால் இந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar wants alliance with congress for election selva perunthagai infor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->