#திருப்பூர் || கடன் பிரச்சனையால் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாட்டத்தில் கடன் பிரச்சனையால் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கடைவீதியில் வெங்கடாசலம்(49) என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இந்நிலையில் நேற்று வெங்கடாசலம் வீட்டில் மயங்கி கிடந்து உள்ளார்.

இதைப்பார்த்த மனைவி அதிர்ச்சடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெங்கடாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு முதலுதவி பெற்ற வெங்கடாசலம், மனைவியிடம் கடன் பிரச்சனையால் தங்க நகைகளை உருக்க பயன்படும் சயனைடு குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சூலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jewelry shop owner commits suicide in Tiruppur


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->