ஜெயராஜ், பெண்ணிக்ஸ் கொலை வழக்கு.. பதறவைக்கும் தகவலை வெளியிட்ட சி.பி.ஐ.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும், மகனுமாகிய ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் கொடூரமாக காவல் துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சி.பி.ஐயின் விசாரணை தகவல் அறிக்கையில், இருவரும் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தந்தை, மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். 

காவல் நிலையத்திற்கு உள்ளே இருக்கும் அறையில், ஆடையினை களைந்து தந்தை மற்றும் மகனையும் கொடூரமாக அடித்துள்ளனர். மேஜையின் மீது குனிய வைத்து, தந்தையும் மகனையும் காவல் அதிகாரிகள் மூன்று பேர் பிடித்துக்கொள்ள ஸ்ரீதர், முத்துராஜா கடுமையாக அடித்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் ரத்தம் கொட்ட தொடங்கியதாகவும் சி.பி.ஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற நெஞ்சை பதறவைக்கும் தகவல்கள் சி.பி.ஐ பதிவு செய்த முதல் குற்றப்பத்திரிகை அறிக்கையில் கூரடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayaraj and Fenix Murder issue CBI FIR Report 26 October 2020


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal