ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கிடைத்த புது தகவல்கள்..! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டில் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

கோடநாடு, கொலை, கொள்ளை, ஜெயலலிதா, பங்களா, சென்னை உயர்நீதிமன்றம், மனோஜ், இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, "வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மேல் விசாரணை நடத்தப்பட்டதில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.

நீதிபதி சதீஸ்குமார், தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்,16க்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jayalalitha's kodanaadu bunglow found new information


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->