ஜெயலலிதா மரணம் : திதி கொடுத்த தீபக்.! அறிக்கையில் வெளிவந்த பஞ்சாங்க தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 -ந்தேதி  உடல்நலக் குறைவால் உயிரிழிந்தார். அப்போது முதல்வரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தது.  இதில் யார் தான் குற்றவாளி என்பதை அறிவதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் 608 பாக்கம் கொண்ட விசாரனை அறிக்கையை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

இதில் முக்கிய குற்றவாளியாக சசிகலா, கே.எஸ்.சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, ஆறுமுக சாமியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதாவின் திட்டவட்ட இறப்பு நேரமான 2016 டிசம்பர் 4 பிற்பகல் 3.50 என்ற நேரத்தை கருத்தில் கொண்டு அவரது சகோதரர் மகன் ஜெ. தீபக் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு திதியைக் கொடுத்துள்ளார் என்று பஞ்சாங்க ஆவணத்தையும் அந்த அறிக்கை காட்டியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jayalalitha death shock news in arumugasamy report


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->