அதிமுக கூட்டணி அமைவதை பாஜக தடுக்கிறதா? - ஜெயக்குமார் விளக்கம்! - Seithipunal
Seithipunal


தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்ட அ.தி.மு.க குழுக்கள் ஒரு மாதம் ஆகியும் பணிகளை தொடங்காதது ஏன் என ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், தேர்தல் குழுக்கள் அவரவர் பணிகளை செய்து வருகின்றது. அ.தி.மு.க கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். 

அதிமுகவோடு கூட்டணி சேர சில கட்சிகள் தயங்குவதற்காக வெளியாகும் தகவல் வதந்தி தான். கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. உரிய நேரத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்படும். 

அ.தி.மு.க கூட்டணிக்கு கட்சிகள் வருவதை பா.ஜ.க மறைமுகமாக தடுக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பா.ஜ.க சொல்வதை கேட்க மற்ற கட்சிகள் குழந்தைகளா என பதில் அளித்துள்ளார். 

மேலும் கடைசி நேரத்தில் கூட அரசியலில் எதுவும் நடக்கும் எனவும் கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக பா.ஜ.க தெரிவிப்பது பிற கட்சிகளுக்கு தான் அ.தி.மு.கவுக்கு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar speech goes viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->