நாளை (27.01.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
January 27 local holiday dindugal district
நாளை (ஜனவரி 27ம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நாளை ( ஜனவரி 27 ஆம் தேதி) நடைபெற உள்ளது.
இதனையடுத்து குடமுழுக்கு நடைபெறும் நாளான ஜனவரி 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 25 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
January 27 local holiday dindugal district