'உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்': பள்ளி விழாவில் பாஜக எம்.பி அனுராக் தாகூர்: நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு முன் 21 வீரர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள்...?
BJP MP Anurag Thakur says Hanuman is the worlds first astronaut
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் பாஜக எம்.பி அனுராக் தாகூர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்..? என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் 'நீல் ஆம்ஸ்ட்ராங்' என பதிலளித்தனர். ஆனால், அதற்கு அனுராக் தாக்கூர் 'எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தொடந்து அங்கு பேசுகையில் கூறியதாவது: நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால், நாம் பாடப்புத்தகங்களுக்கு அப்பாலும் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், அந்தத் திசையில் பார்த்தால், நிறைய விஷயங்களைக் காணமுடியும் என்று மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வரலாற்று சான்றுகளின் படி பார்த்தால், முதல் விண்வெளி வீரர் சோவியத் யூனியனின் யூரி ககாரின்தான். ஏனெனில், அவர், 1961-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யவின் வோஸ்டோக் 1 விண்கலம் மூலம் அதிகபட்சமாக 327 கி.மீ உயரத்திற்கு விண்ணில் பறந்து சென்றார். அத்துடன், 108 நிமிடங்கள் வரை அவர் விண்வெளியில் இருந்து பூமியை சுற்றினார். பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கினார். ஆக வரலாற்று ரீதியில் அவர்தான் முதல் விண்வெளி வீரர்.
இருப்பினும், அவரை தொடர்ந்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06-ஆம் தேதி வோஸ்டோக் 2 விண்கலத்தில் ஜெர்மன் டிட்டோவ் எனும் மற்றொரு சோவியத் வீரர் விண்வெளிக்கு சென்றார். இதன் பின்னர் 19 என மொத்தமாக வீரர்கள் சென்றுள்ளனர். அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு விண்வெளிக்கு செல்லும் முன்னர் மொத்தம் 21 வீரர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள். ஆனால், 1969-இல் தான் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP MP Anurag Thakur says Hanuman is the worlds first astronaut