ஐ.டி.ஐ மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் (ஐ.டி.ஐ) சென்னை மாநகர பேருந்துகளில் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் தொழிற்பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கிட தமிழ்நாடு அரசால் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பாக சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம். 

தொழிற்பயிற்சி படித்து வரும் முதலாம் வருட, இரண்டாம் வருட மற்றும் முன்றாம் வருட மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் " என்று தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  இதன் மூலமாக தொழிற்பயிற்சி படித்து வரும் ஏழை-எளிய மாணவர்கள் பலன் பெறுவார்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITI Students Travel Chennai MTC Bus till Aug 2021


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->