அரியலூர் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வீட்டில் ஐடி ரெய்டு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்கும் விதமாக, வருமான வரித் துறை கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அப்பு என்கிற விநாயக வேல் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் படி, திருச்சி கிராப்பட்டியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை இன்று நிறைவு பெற்றது. 

கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raide in ariyalur DMK youth deputy secretary


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->