ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஏஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-நடைபெறும் என அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த  டிஎன்பிஏஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
 
வரும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அத்துடன், பிப்ரவரி 22-இல் நடைபெறவிருந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It has been announced that the cancelled TNPSC Group 2 and 2A exams will be held on March 15th


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->