தவில், நாதஸ்வர பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Invitation to apply for Nadhaswaram diploma courses
பாரதியார் பல்கலைக்கூடத்தில் தவில் நாதஸ்வர பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை , நாட்டியத்துறை , நுண்கலைத்துறை ஆகிய மூன்று துறைகள் உள்ளன. இந்த புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் கடந்த 2003 ம் ஆண்டு முதல் தவில் மற்றும் நாதஸ்வரம் பட்டயப்படிப்புகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன.
தற்போது 2025-26 ஆம் ஆண்டுக்கான தவில் நாதஸ்வர பட்டயப்படிப்புகள் சேர விரும்புகிறவர்கள் பல்கலைக்கூட அலுவலகத்தை தெடர்பு கொள்ளலாம். மேலும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பட்டயப்படிப்பு முடித்தவர்கள் தவில் நாதஸ்வர பட்டப்படிப்பில் சேரலாம். ஏற்கனவே 2024-25 ம் கல்வியாண்டு முதல் தவில் நாதஸ்வரம் ஆகியவை டிகிரி பட்டப்படிப்பாக நடத்தப்பட்டு வருகின்றன என பாரதியார் பல்கலைக்கூடம் ,முதல்வர் தெரிவித்துள்ளார்.

English Summary
Invitation to apply for Nadhaswaram diploma courses