பன்னாட்டு மருத்துவ மாநாடு -சென்னையில் துவக்கம்!
International Medical Conference Starts in Chennai
சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.பின்னர் நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற நூலை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-“சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் "எதிர்கால மருத்துவம் 2.0" இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடங்கி வைத்தார் ,அப்போது அவர் துணைவேந்தர் மரு.நாராயணசாமி இயற்றிய "நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு" எனும் நூலினை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, பன்னாட்டு மருத்துவ பேராசிரியர்கள் ரெபேக்கா மில்லர், கபிலன் தர்மராஜன், நாகலிங்கம் வர்ணகுலேந்தரன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
International Medical Conference Starts in Chennai