"இந்தியன்‌ பில்லர்ஸ்‌" தன்னார்வ அமைப்பு ம.நீ.மவில் இணைவு...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் கமல் ஹாசன் தீவிரமான பிரச்சாரத்தை கையில் எடுத்து மக்களிடையே உரையாற்றி வருகிறார். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " நமது தலைவர்‌ திரு.கமல்‌ ஹாசன்‌ அவர்களின்‌ நான்காம்‌ கட்டப்‌ பிரச்சாரம்‌ சேலம்‌ மண்டலத்தில்‌ வெகு சிறப்பாகவும்‌ மக்களின்‌ மகத்தான திரள்‌ எழுச்சியுடனும்‌ வெற்றிப்பிரச்சாரமாக நடந்துமுடிந்தது.

இந்நிலையில்‌ மாற்றத்தின்‌ மறு உருவாகவும்‌ இளைஞர்களின்‌ ஒரே தேர்வாகவும்‌ தீர்வாகவும்‌ திகழும்‌ நமது தலைவர்‌ கமல்‌ ஹாசன்‌ அவர்களின்‌ முன்னிலையில்‌ "இந்தியன்‌ பில்லர்ஸ்‌" என்கின்ற தன்னார்வல அமைப்பின்‌ சார்பாக தருமபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரியைச்‌ சேர்ந்த ஏறத்தாழ 200க்கும்‌ மேற்பட்ட இளைஞர்கள்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இணைந்திருக்கின்றனர்‌ " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Pillars Foundation Join with Kamal Hassan MNM Party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal