வெளிநாட்டு வேலை: இவிங்ககிட்ட சிக்கிடாதீங்க லைஃப் காலி! மீட்கப்பட்ட 67 இந்தியர்கள்! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்கள், போலியான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு சென்று அங்கு இணையமோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

இவ்வாறு வெளிநாடு அழைத்துச் செல்லப்படுபவர்கள் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கம்பி வேலியிடப்பட்ட மோசடி நடக்கும் வளாகங்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

அங்கு பெடெக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகள், திருமண மோசடி, காதல் மோசடிபோன்ற இணைய மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுக்கும்பட்சத்தில் மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பிற உடல் ரீதியிலான துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வேலை மோசடியால் கம்போடியா நாட்டில் சிக்கித் தவித்த 67 இந்தியர்கள் தூதரகம் வாயிலாக மீட்கப்பட்டுள்ளனர். 

போலி முகவர்கள் மூலம் மோசடி வேலையில் சிக்கி மீட்கப்பட்டவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கம்போடியா நாட்டின் அரசுடன், இந்திய தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது இந்த 67 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

கம்போடியாவில் வேலை இருப்பதாக கூறி இளைஞர்களை சில கும்பல் சைபர் குற்றங்களுக்கு அடிமையாக்கி நடத்துவதாக தெரியவந்துள்ளது. 

போலி முகவர்கள் மூலம் இணைய விளம்பரங்களை நம்பி வெளிநாட்டு வேலைக்கு செல்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் உதவிக்கு இந்திய தூதரகத்தை +85592881676, +8559286969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian labour rescue in Cambodia


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->