பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது: அசாதுதீன் ஓவைஸி..!
India has been severely affected by Pakistan sponsored terrorism Asaduddin Owaisi
'' பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, '' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ளார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை ஓவைஸி கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பயங்கரவாதத்தை ஆதரித்து, இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எம்.பி.,க்கள் கொண்ட குழுவை பிரதமர் மோடி அமைக்கவுள்ளார்.
இந்நிலையில் அசாதுதீன் ஓவைஸி பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- பாகிஸ்தான் நீண்ட காலமாக தூண்டிவிடப்படும் பயங்கரவாதம், மனிதநேயத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதுஎன்றும், இந்த செய்தியை எம்.பி.,க்கள் குழுவினர் உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் காரணமாக இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் ஆட்சிக்காலம் முதல் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான மோதலில், பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக காட்டிக் கொள்வது முட்டாள்த்தனமானது என விமர்சித்துள்ளார். அத்துடன், இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இது குறித்தும் உலக நாடுகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உருவாக்குவது, வகுப்புவாதப் பிளவை தூண்டுவது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பது ஆகியவை பாகிஸ்தானின் எழுதப்படாத சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இதுவே, பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் நோக்கமாக இருந்து வருகிறதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், 1947 முதல் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை அனுப்பி வருகிறது என்றும், இதனை அவர்கள் தொடரத்தான் செய்வார்கள், நிறுத்தப்போவது கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, இந்தியாவின் பொறுமையை இழந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான், மனித நேயத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று ஓவைஸி தெரிவித்துள்ளார்.
English Summary
India has been severely affected by Pakistan sponsored terrorism Asaduddin Owaisi