சுகந்திர தினத்தன்று பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் சுகந்திர தினவிழா வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையோட்டி, அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுவர். இது தொடர்பாக பல்கலைகழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை மற்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இணைத்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா அன்று தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும். கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ(விர்ச்சுவல் பார்மெட்) தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம். 

நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். 

தேசிய போர் நினைவு சின்னம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

independence day guidelines


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->