ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா...?
Increased water flow in Okenakkal Do you know what situation today
கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் காவிரி ஆற்றின் நீர்வரத்து ஒகேனக்கல்லில் ஏற்றத் தாழ்வாக காணப்படுகிறது.இதில் நேற்று (17ம் தேதி) ஒகேனக்கல்லுக்கு 6,500 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பொங்கும் சத்தத்தோடு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.அங்கு பாறைகளைக் கடந்து பாயும் வெள்ளத்தின் அழகைக் காண சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டனர்.

அங்கு பரிசலில் சவாரி செய்து காவிரியின் வலிமையையும் அழகையும் ரசித்த சுற்றுலாப் பயணிகள், தொங்கு பாலத்தில் நின்று வெள்ளப் பாய்ச்சலைக் கண்டு வியப்புற்றனர்.
மேலும், குழந்தைகள், பெண்கள், குடும்பங்கள் என பலரும் அருவியில் குளித்து ஆனந்தம் கொண்டாடினர்.அதுமட்டுமின்றி, கரையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் கார சுவைமிக்க மீன் வறுவலை சாப்பிட்டு, பூங்காவில் அமர்ந்து மகிழ்ந்தனர்.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், ஒகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிலிகுண்டுலுவில் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Increased water flow in Okenakkal Do you know what situation today