அதிகரித்த ஒகேனக்கல் நீதிர்வரத்து...! எவ்வளவு கன அடி தெரியுமா..?
Increased flow of water from Okenakkal Do you know how many cubic feet
கர்நாடகா மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காவிரி கரையோரங்களில் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கன அடியாக இருந்தது.இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்து வந்தது.

ஆகையால் சினிபால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
அதன் பிறகு சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் நீராடி மகிழ்ந்தனர். அதனால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Increased flow of water from Okenakkal Do you know how many cubic feet