கொரோனா தொற்று அதிகரிப்பு..பள்ளிகளை ஆய்வு செய்ய திமுக MLA வலியுறுத்தல்!
Increase in coronavirus infectionDMK MLA insists on inspecting schools
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் முன் சுகாதார மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு நமச்சிவாயம் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு சம்பத் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து 2022-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் முன் சுகாதார மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு நமச்சிவாயம் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு சம்பத் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. நிலையில் தற்போது புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் முன் சுகாதார மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினை உருவாக்கி அனைத்து பள்ளிகளையும் ஆய்வு வேண்டும். பள்ளிகளின் கட்டிடங்கள் , மேல்நிலை மற்றும் கீழ்நிலை குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகியவற்றை முழுமையாக சுத்தம் செய்யவேண்டும், பள்ளி வளாகம் முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை மேற்கண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும் .அதே வேலை கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பள்ளிகளில் தேவையான உபகரணங்கள் வைக்கவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு நமச்சிவாயம் அவர்கள் எடுக்க வேண்டும். என முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு .L. சம்பத் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்.
English Summary
Increase in coronavirus infectionDMK MLA insists on inspecting schools