மாடு, பன்றி தொல்லை அதிகரிப்பு..ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் காரசார விவாதம்!
Increase in cattle and pig nuisances Intense debate in the monthly meeting of Arkadu municipality
மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடு, பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட் டம் ஆற்காடு நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டாக்டர்.பவளக்கொடி சரவணன் ஆணையாளர் வெங்கட லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்பொன். ராஜசேகர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக (பிஎஃப்) வருங்கால வைப்பு நிதி செலுத்தப்படுகி றதா நகரில் தூய்மை பணி மிகவும் முக்கியம் என்று கூறினார்.
நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை மனதில் கொண்டு நகரில் விடுபட்ட வார்டுகளில் கழிவு நீர் கால்வாய் , சிமெண்ட் சாலை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறும். என்று கூறினார். ஆனந்தன் பார்க் இடத்தில் ரேஷன் கடை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு ஆணையாளர் முறையாக அனுமதி பெற்று ரேஷன் கடை கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.அணு அருண் நகரின் பெரும்பாலான பகு திகளில் மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடு, பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பி.டி.குணா எனது வார்டில் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி பல நாட்கள்ஆகிறது ஆனால் இதுவரை சாலை அமைக்கப்பட வில்லை இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் சாலையில் தடுமாறி விழுந்து காயம் ஏற்படுகிறது .சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து செல்வம் எனது வார்டில் பழுதடைந்த பள்ளிகட்டி டம் உள்ளது இடித்து விட்டு புதியதாக கூடுதல் பள்ளி கட்டிடம் கட் டித்தர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாதம் நடைபெற்றது கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Increase in cattle and pig nuisances Intense debate in the monthly meeting of Arkadu municipality