ஃபுல் போதை... சாலையா? சோலையா? என்ற சந்தேகத்தில் பள்ளத்தில் லடால்..!! அரசு பேருந்து ஓட்டுனரின் அட்ராசிட்டி..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும்., சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும் தினமும் பல்லாயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்., விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்., நேற்றிரவு வழக்கம்போல விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் கன்னியப்பன் இயக்கிய நிலையில்., சுமார் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

இந்த பேருந்தானது அங்குள்ள தியாக துருகம் புறவழிசாலையில் வந்து கொண்டு இருந்த சமயத்தில்., தீடீரென எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி., பேருந்து ஏன் பள்ளத்தில் இறங்கியது என்று ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., ஓட்டுநர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. 

ஓட்டுனர் மது போதையில் இருந்ததை அறிந்து அதிர்ச்சியான பயணிகள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு., துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

மேலும்., இந்த விபத்தில் அதிஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படாததால் நிம்மதியடைந்த பயணிகள்., மாற்று பேருந்தின் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram bus accident peoples panic and complaint


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal