காதலருடன் இருந்த பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்... வேலூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறையை அடுத்துள்ள கிராமத்தை சார்ந்த 24 வயதுடைய இளம்பெண் வேலூரில் இருக்கும் தனியார் ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். இக்கடையில் காட்பாடி பகுதியை சார்ந்த வாலிபரும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நேரத்தில், இவர்கள் இருவருக்குள் நட்பு ரீதியாக ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று காதல் ஜோடி வேலூரில் இருக்கும் கோட்டை பூங்காவில் தனியாக சந்தித்து பேச முடிவு செய்து, இரவு பணி நிறைவு பெற்றதும் 9.50 மணிக்கு வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றுள்ளனர். 

பூங்காவில் இருக்கும் அகழி கரையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், இவர்களை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியருகே வந்து பெண்ணை தனியாக இழுத்து சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

பெண்ணுடன் இருந்த காதலனை அடித்து உதைத்து நொறுக்கியுள்ளனர். இளம்பெண்ணிடம் இருந்த கம்மல் மற்றும் அவரின் அலைபேசியை பறித்துக்கொண்டு நிலையில், பெண் காமுகர்களின் கையில் சிக்கி உதவிக்காக அலறியுள்ளார். இதனால் பெண்ணையும் காமுக கும்பல் கொடூரமாக தாக்கியுள்ள நிலையில், இவரின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு மக்கள் விரைந்தனர். 

இதனை கண்ட கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே, இளம்பெண்ணை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். பின்னர் பெண்ணின் காதலன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்து சந்தித்தல் அல்லது மிளகாய்ப்பொடி போன்றவை வைத்துகொள்ளுதல் நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore girl sexual harassment in front of his love boy


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal