ஐபிஎல் 2026: முதல் போட்டியிலேயே சாதனை மழை - ஹைதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அதிரடி வெற்றி! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்தத் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்குத் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவர் வெறும் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 80 ரன்களைக் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனிகேத் வர்மா 43 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி முட்டுக்கட்டை போட்டார். அவர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரொமாரியோ ஷெப்பர்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி, சின்னசாமி மைதானத்தை ரன் மழையில் நனைத்தது. நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பழைய பார்மிற்குத் திரும்பி, 38 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் 234 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி, வெறும் 26 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். இறுதி நேரத்தில் ரஜத் படிதார் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

இதன் விளைவாக, பெங்களூரு அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 200-க்கும் அதிகமான இலக்கை இவ்வளவு விரைவாக (26 பந்துகள் மீதமிருக்கையில்) சேஸ் செய்து பெங்களூரு அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் அதிக ரன்களை விரட்டிப் பிடித்த அணி என்ற பெருமையையும் ஆர்சிபி பெற்றுள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB Record-Breaking Start in IPL 2026 Crushes SRH at Chinnaswamy


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->