நண்பனின் புகைப்படத்தை எடிட் செய்து கொரோனா பீதி... கம்பி என்னும் நட்புகள்.!! - Seithipunal
Seithipunal


உலகத்தை ஆட்டிவைத்துள்ள கரோனா வைரஸ் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வந்தந்தியும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விழிப்புடன் இருக்கும் பொதுமக்கள் கூட விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை சார்ந்த வாலிபர்கள் செய்தி தொலைக்காட்சியில் இருந்து செய்தியை கூறுவது போல பீதியை கிளப்பியுள்ளனர். 

இந்த புகைப்படத்தில் இரண்டு இளைஞர்களுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், இவர்களுக்கு குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட வாலிபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியை சார்ந்த விஜயன் (வயது 19), காந்திநகர் சுகுமார் (வயது 19) மற்றும் சிவகுமார் (வயது 22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் நண்பரான விஜயன் தனது நண்பனின் புகைப்படத்தை விளையாட்டுத்தனமாக எடிட் செய்து பரப்பியது தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore friend share fake news police arrest them


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->