பிள்ளைகள் போல வளர்த்தோமே... விஷம் வைத்து கொலை செய்துவிட்டானே..! கதறியழுத பெண்கள்., அரக்கோணத்தில் பெரும் சோகம்..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரீட்டா (வயது 32). இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயை வளர்த்து வந்தார். இவருக்கு நாயின் மீதுள்ள அதிக பாசத்தால்., இவரது தெருவில் வசித்து வந்த நாய்களுக்கு உணவும் அளித்து வந்துள்ளார். 

இதன் காரணமாக இவரது வீட்டினை சுற்றிலும் எந்த சமயத்திலும் 15 க்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பது வழக்கம். தனது பிள்ளைகள் போல அனைத்து நாய்களையும் வளர்த்து வந்த நிலையில்., நேற்றிரவு நாய்களுக்கு மர்ம கொடூரன் ஒருவன் விஷம் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதனை அறியாத நாய்கள் உணவு என எண்ணி., விஷம் கலக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்ட நிலையில்., சிறிது நேரத்தில் சுமார் 10 நாய்கள் வீதிகளில் அலறி துடித்துள்ளது. 

நாய்களின் அபயக்குரல் உள்ள விபரீத்தை அறிந்த பொதுமக்கள்., கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள்., தீவிர சிகிச்சை அளித்ததில் மூன்று நாய்கள் மட்டுமே உயிர் பிழைத்தன.

மேலும்., ஏழு நாய்கள் அடுத்தடுத்து இறந்ததை அறிந்த அப்பகுதி பெண்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நாய்களின் உடலை அரக்கோணம் நகராட்சி அதிகாரிகள் நல்லடக்கம் செய்தனர். 

மேலும்., இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும்., நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த கொடூரனை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாய்கள் ஒரு வேலை உணவு வைத்தாலும்., வைக்கா விட்டாலும் அதனை விரட்டாமல் இருங்கள்... நீங்கள் உணவு வைக்க வில்லை என்றாலும்., உங்களின் வீட்டிற்குள்ளோ அல்லது தெருவிற்கோ முகமறியா நபர் வரும் சமயத்தில்., முதலில் நமக்கு எச்சரிக்கை செய்வதும்., சந்தேகப்படும் நபராக இருந்தால் கூட்டத்துடன் விரட்டி நம்மை பாதுகாப்பதும் நாய்கள் தான்.. இது சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என்பது தான் பெரும் சோகம்.... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore 7 dogs killed by culprit police investigation going on


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal