திருச்சியில், பெண் கூட்டுப்பலியால் பலாத்காரம்.. ஓடும் காரில் இருந்து வீசி சென்ற கொடூர கும்பல்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ஆய்வுகளின் படி தினமும் சராசரியாக 83 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. 

தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2018 ஆண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. 33 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டைவிட பெண்களுக்கு எதிரான வழக்குகள் 19 ஆயிரம் வழக்குகள் அதிகரித்து 3 லட்சத்து 78 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றத்திற்கு சட்டங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் பெண்ணொருவரின் உடல் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர். 

sexual harassment,

அங்கு சென்று பார்க்கும் போது பெண் அரைமயக்கத்தில் இருந்துள்ளார். மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. பின்னர் அவசர ஊர்தியின் மூலமாக பெண்ணை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், பெண் நேற்றிரவு கடத்தப்பட்டு நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in trichy girl gang rapped police investigation going on


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->