பிரியாணிக்காக மனைவியை எரித்த கொடூர கணவன்.. திருவாரூரில் பேரதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் அருகே இருக்கும் கொத்தங்குடி ஜீவா நகர் பகுதியை சார்ந்தவர் சித்திரை வேல் (வயது 45). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவியின் பெயர் கற்பகம் (வயது 32). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்களுக்கு மதுசூதனன் என்ற 8 வயதுடைய மகன் உள்ளார். 

சித்திரவேல் அவ்வப்போது மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்த நிலையில்., சித்திரை வேலுவின் தங்கைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. 

இந்த நிலையில்., சம்பவத்தன்று சித்திரைவேல் மது அருந்திவிட்டு வந்து., அக்கம்பக்கத்தில் வசிக்கும் அவர்களிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில்., தங்கையின் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை கண்டுள்ளார். 

 cirme, crime images,

இதனையடுத்து பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆவலில் மனைவியிடம் பிரியாணி வாங்கி வர கூறிய நிலையில்., தன்னால் செல்ல இயலாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அப்படியென்றால் வீட்டில் பிரியாணி செய்ய சொல்லி கூறவே., வீட்டில் பிரியாணிக்கு தேவையான பொருட்கள் இல்லை என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சித்திரைவேல் கற்பகத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயின் வெப்பம் தாங்கமுடியாமல் கற்பகம் அலறவே., அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., இது ஒரு தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மனைவியை கொலை செய்ய முயற்சித்த சித்தரை வேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thriuvarur wife try to kill by husband police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal