நடிப்பு மனைவியால் நடுவீட்டில் தொங்கிய கணவன்?... தூத்துக்குடி மனைவி நகை அபேஸ் செய்த விகாரத்தில், கணவர் விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தாளமுத்து நகர் பகுதியை சார்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை. இவரது மனைவி ஜான்சி ராணி. இவர் வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் இயக்குபவராக பணியற்றி வரும் நிலையில், வின்சென்ட் கஞ்சனாக இருந்து பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஜான்சி ராணி, வீட்டில் உள்ள நகையை திருடி பணத்தேவையை பூர்த்தி செய்ய நினைத்து, கரோனா தடுப்பு மருந்து என்று கூறி மயக்க மருந்தை கலந்து கொடுத்து கணவரை உறங்க வைத்துள்ளார். 

பின்னர் வீட்டில் இருந்த 90 சவரன் நகைகளை திருடி வீட்டிற்கு பின்னால் புதைத்த நிலையில், மறுநாள் காலையில் நகையை காணவில்லை என்று கூறி நாடகம் ஆடியுள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், மனைவியிடம் மேற்கொண்ட கிடுக்கும்படி விசாரணைக்கு பின்னர் நகைகளை திருடியதும், அதை விற்பனை செய்து பணத்தை வைத்து செலவு செய்ய முடிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஜான்சியின் வெளிச்சம் அனைத்தும் வெளியே தெரிந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைது செய்து நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளனர். 

இவர் தனது கணவரின் இல்லத்தில் இருந்து வந்த நிலையில், வின்சென்ட் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thoothukudi wife robbery husband savings and gold attempt suicide


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal