வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக ஆட்சி அமைக்கும்..முன்னாள் முதல்வர் நாராயணசாமி கணிப்பு!  - Seithipunal
Seithipunal



 சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக நகர பகுதியான சக்தி நகர், கோவிந்தசாலை, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, பிள்ளைத்தோட்டம், நேரு நகர், லெனின் வீதி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பொறியாளர்களும் மற்றும் களப்பணியாளர்களும் சுமார் 60 பேர் அடங்கிய குழு கடந்த 8-ஆம் தேதி முதல் காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் குடிநீரை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்பொருட்டு  குடிநீர் பறக்கும்படை ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்தனர்.புதுச்சேரி பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 450 கிலோ மீட்டர் நீளத்திற்கு அதிகமான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் கழிவுநீர் குழாய்களின் நீளம் 400 கிலோ மீட்டர் அதிகமாக உள்ளன. இவற்றினை பராமரித்தல், பாதுகாத்தல் என்பதும் இந்த குழாய்களில் ஏதேனும் பிரச்சனைகள் உடைப்பு, அடைப்பு உள்ளதா என கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சாக்கடை கலந்த குடிநீர் குடித்து இதுவதை 12-நபர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தலா-20 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

பிரதமரின் பிறந்தநாளையொட்டி கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியில் அவரை ஐக்கிய படுத்திக் கொண்டுள்ளார் எனவே அவர் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை.

பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கனவை நேற்றைய தினம் மத்திய அமைச்சர் வெளிப்பத்தி உள்ளார் ஆனல் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக ஆட்சி அமைக்கும்  என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார் .


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the upcoming assembly elections Congress and DMK will form the government Former Chief Minister Narayanasamys prediction


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->