நான் ஏமாற்றவிலை.. இவர்தான்... விமானப்பணி மோசடியில் வெளியான பகீர் தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களணிகோட்டை பகுதியை சார்ந்தவர் டிம்பிள் ஷியா. இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பரபரப்பு புகார் எழுந்தது. 

இந்த புகாரில் டிம்பிள் ஷியா லோகேஸ்வரன் என்ற நபரிடம் ஏர் இந்திய விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 இலட்சம் பணம் வாங்கி இருக்கிறார். லோகேஸ்வரனும் இது குறித்த தகவலை தனது நண்பர்களுக்கும் தெரிவித்த நிலையில்., லோகேஷின் நண்பர்கள் குணா மற்றும் பிரவீன் தலா ரூ.5 இலட்சம் கொடுத்துள்ளனர். 

பணத்தை வாங்கி கொண்ட டிம்பிள் ஷியா பணியை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும், இதனால் கடுமையான ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் டிம்பிள் ஷியாவின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும் போதே டிம்பிள் ஷியா நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்த நிலையில், டிம்பிள் ஷியா தற்போது கைகளை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

நல்ல வேலையாக டிம்பிள் ஷியாவின் தாயார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று டிம்பிள் ஷியாவை காப்பற்றிய நிலையில், தற்கொலைக்கு முன்னதாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மேலும்., இவரது குடும்பத்தினருடன் ஏர் இந்திய மேற்பார்வை அதிகாரி மோகனன் என்பவரின் மனைவி சப்தகிரி கார்கோவிற்கும் - டிம்பிள் ஷியாவின் குடும்பத்தினருக்கும் நல்ல பழக்கம் இருந்துள்ளது.

மேலும், ஜனவரி மாதத்தின் போது டிம்பிள் ஷியாவின் நண்பருக்கு மோகனன் ரூ.5 இலட்சம் பெற்றுக்கொண்டு பணி வாங்கி தந்த நிலையில், தனது காதலரான டிம்பிள் ஷியா விக்னேஷிற்கு பணி வாங்கித்தர ரூ.20 இலட்சம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த டிம்பிள் ஷியாவின் நண்பர்கள் இலட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளனர். 

இந்த பணத்தினை பெற்றுக்கொண்ட மோகன் தற்போது வேலை வாங்கி தராமல் இருந்து வருவதை அடுத்து, தான் சிக்கலில் மாட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதனை கண்ட மோகனன் தான் டிம்பிள் ஷியாவிடம் இருந்து தேநீர் கூட வாங்கி குடித்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும்., வேறு யாரிடமோ பணத்தினை கொடுத்துவிட்டு தன்னை சிக்க வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam fraud police investigation


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal