தனி மாநில தகுதி பெற கையெழுத்து..முக்கிய தலைவர்களை சந்தித்து கையொப்பம் பெற்ற குழுவினர்! - Seithipunal
Seithipunal



புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் துணை சபாநாயகர் இராஜவேலு அவர்களிடமும்,  கொறடா திரு.ஏ கே டி ஆறுமுகம் அவரிடமும் ,காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்  சந்திரா பிரியங்கா அவர்களிடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  சலீம் அவர்களிடமும் இன்று கையொப்பம் பெறப்பட்டது . 

புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் தலைமையில் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர்.இதற்காக டெல்கியில் சென்று போராடவும் முடிவு செய்துள்ளனர்.மேலும் புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி பெற சமீபத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு முதல் கையெழுத்தை முதலமைச்சர் ரங்கசாமி போட்டு தொடங்கிவைத்தார்,இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் தலைமையில் சட்டமன்ற துணை சபாநாயகர் மாண்புமிகு இராஜவேலு அவர்களிடமும், புதுச்சேரி சட்டமன்ற கொறடா திரு.ஏ கே டி ஆறுமுகம் அவரிடமும் ,காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி. சந்திரா பிரியங்கா அவர்களிடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் திரு சலீம் அவர்களிடமும் இன்று கையொப்பம் பெறப்பட்டது . 

நிகழ்வில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், பி போல்ட் பஷீர் ,இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்கிளின், ஒடுக்கப்பட்ட சிறுத்தைகளின் கட்சி அறிவு மணி ,இந்திய தேசிய இளைஞர் முன்னணி தாமரை கண்ணன்,சரவணன் அனிமல் வாய்ஸ் அசோக் ராஜ் இன்னும் பல தலைவர்கள் உடன் இருந்தனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In order to obtain individual state status signatures have been collected from important leaders by the team


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->