இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கொடூர கும்பல்.. காவல் துறையினரின் விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி பின்னணி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்துள்ள ராயக்கோட்டை அருகேயுள்ள உத்தனப்பள்ளி பஜார் தெருபகுதியை சார்ந்த இல்லத்தில், நேற்றிரவு சுமார் 9 மணியளவில் பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர் பார்க்கையில் அசாம் மாநிலத்தை சார்ந்த இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுக்காப்பாக கும்பலொன்று இருந்துள்ளது. 

பெண்களின் முகத்தில் இருந்த பயத்தை புரிந்துகொண்ட கேள்வி கேட்கவே, கும்பலை சார்ந்த நபர்கள் மக்களை விரட்டியடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், இது தொடர்பாக உத்தனப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்ததும் கும்பல் தப்பி சென்ற நிலையில், வீட்டில் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். 

pregnant,

இரண்டு பெண்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஒரு பெண்மணி வாடகை தாயாக செயல்பட்டு வருவாவதும், இவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதால் சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அங்குள்ள உத்தனப்பள்ளி பகுதியை சார்ந்த முக்கிய புள்ளிக்கு குழந்தைபாக்கியம் இல்லாத காரணத்தால், வாடகை தாய்க்காக அசாமில் இருந்து பெண்ணை அழைத்து வந்து பராமரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த பெண்ணிற்கு அசாம் மொழி மட்டுமே தெரியும் என்ற காரணத்தால், மற்றொரு பெண்ணை துணைக்கு வைத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் துறையினர் பெண்ணை வாடகை தாயாக அழைத்து வந்தது யார்? புரோக்கர் யார்? வாடகை தாய்க்கு மருத்துவர் மற்றும் மருத்துவ பரிசோதனை எங்கு மேற்கொள்ளப்பட்டது? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri rent mother torture by gang due to abortion


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal