கணவனுடன் சண்டையிட்டு, குழந்தைகளுக்கு பாதகம் செய்த தாய்... கன்னியாகுமரியில் பேரதிர்ச்சி சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுக்குவிலை பகுதியை சார்ந்தவர் பிரவீன் ராஜு. இவரது மனைவியின் பெயர் மினி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் சண்டையிட்டு பின்னர் சமாதானமாவது வாடிக்கையாகியுள்ளது.

இந்த நிலையில்., கடந்த 19 ஆம் தேதியன்று கணவன் - மனைவிக்கு இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டு இருந்த நிலையில்., இதனால் ஆத்திரமடைந்த மினி தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து., தானும் விஷம் குடித்து மயங்கியுள்ளார். 

hospital, hospital images,

இவர்கள் மூவரும் மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜு அதிர்ச்சியடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்., மினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மேலும்., இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்., இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in kanniyakumari mother give poison food for baby and suicide attempt


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->