டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..! கிராமமே கதறியழுத பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் தாளவாடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்தது வருபவர் மஞ்சுநாத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சுஜாதா. இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இருவருக்கும் ஏழு வயதுடைய சரண் என்ற மகன் உள்ளார். 

சரண் அங்குள்ள தாளவாடி தோட்ட காஜனுர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில்., இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில்., கடந்த 20 தினங்களுக்கு முன்னதாக சரனிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை அங்குள்ள தாளவாடி அரசு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சிகிச்சைக்கு பின்னர் சிறுவனை கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து சிறுவனை 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்து., சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

dengue, dengue fever, dengue mosquito,

சிறுவனின் இறப்பை அறிந்த பெற்றோர்கள்., சிறுவனின் உடலை கட்டியணைத்து கதறியழுத காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில்., சிறுவனின் உடலை பெற்றோர்கள் சொந்தஊருக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

மேலும்., டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிறுவன் உயிரிழந்தது அங்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவித்தாவது., இங்குள்ள சுற்றுப்புற பகுதிகளை சுகாதார துறையினர் மூலமாக சுத்தம் செய்யப்பட்டு., கொசு மருந்துகள் அடித்து கொசுக்களை ஒழிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in erode boy died due to dengue fever


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->