தலையை சுற்றிய கடன் தொல்லை.. கணவனும் கைவிட்ட சோகம்.. இறுதியில் பெண் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பலரும் பல விதமான காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகள் சில சமயம் தற்கொலைகளாக இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. மேலும்., கடன் தொல்லையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகம் தமிழகத்தில் அதிகரித்து வருவது கண்ணீர் துயரத்தை ஏற்படுத்துகிறது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அருகேயுள்ள இராஜநாயக்கர்தோட்டம் பகுதியை சார்ந்தவர் தேவராஜன். இவரது மனைவியின் பெயர் தீபா. இவர்கள் இருவரும் அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில்., பார்லரை விரிவாக்கம் செய்வதற்காக தீபா பலரிடம் கடனாக வாங்கியுள்ளார். 

இவர் பெற்ற கடன் அனைத்தையும் தரமுடியாமல் தவித்து வந்த நிலையில்., மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ள தீபா தனது கணவரிடம் கூறவே., இதனால் இவர்கள் இருவருக்கும் சண்டையானது அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த தருணத்தில்., கடன் தந்தவர்கள் பேச்சுக்கள் மற்றும் கணவரின் பேச்சால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேத பரிசோதனைக்காக தீபாவின் உடலை அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Coimbatore girl attempt suicide due to loan


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal