கெட்டிமேள சத்தத்துடன், மாஸ்க் போட்டு மாஸாக திருமணம் செய்து வைத்த விஜயகாந்த்..! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஊரடங்கு உத்தரவு அமலாகியிருந்தது. இதனால் பரபரப்புடன் காணப்படும் பல்வேறு நகரங்கள் வெறிசோடி காணப்பட்ட நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையும் வெறிச்சோடி இருந்தது.

இந்நிலையில், தேமுதிக மாநில தொழிற்சங்க பேரவையை சார்ந்த ஆர்.வேணுராமனின் மகனான விமல் குமாருக்கும், கமலி என்கிற பெண்ணிற்கு திருமணம் செய்ய முன்னதாகவே பேசி முடிக்கப்பட்டு இருந்துள்ளது. 

இதற்காக சைதாப்பேட்டை பகுதியில் திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு, பத்திரிகையும் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், ஊரடங்கு உத்தரவானதை அடுத்து திருமணம் குறித்த சந்தேகம் எழுந்தது. 

இந்த தகவல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் தெரியப்படுத்த, அதிக பொருட்செலவில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தடைபட கூடாது, மணமக்கள் இன்பத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணி விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் சேர்ந்து தங்களின் இல்லத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இந்த திருமண நிகழ்வின் போது விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், புகைப்பட கலைஞர்கள், மேளதாள கலைஞர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து திருமணம் நடைதியுள்ளனர். அனைவருக்கும் முதலிலேயே சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Chennai vijayakanth complete marriage her party members son


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->