அடுத்தடுத்து வெடித்த வீட்டின் கதவுகள்.! தடயவியல் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்...!! இல்லத்தரசிகளே கவனம் தேவை.!! - Seithipunal
Seithipunal


கியாஸ் அடுப்பில் சமையல் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து., வீட்டின் வெளியே யாரிடமும் பேசிக்கொண்டு இருப்பது மற்றும் தொலைக்காட்சியில் முழ்ங்கி இருப்பது போன்று செய்யும் நபர்களுக்கு அதன் விபரீதம் அறிந்தும் அவ்வாறே செய்கின்றனர். தற்போது சென்னையில் நடந்த பிரச்சனையில்., அதிஷ்டவசமாக குடும்பத்தினர் தப்பியுள்ளனர். கவனமாக இருங்கள்... 

தமிழகத்தில் சென்னையில் உள்ள கிண்டி நேரு நகரை அடுத்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியை சார்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவர் நேற்று மாலை நேரத்தில் தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு தனது மருமகள் மற்றும் பேரன் ஆகியோருடன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

இந்த சமயத்தில்., வீட்டின் உள்ளறையில் குளிர்சாதனப்பெட்டி யானது இயக்கத்திலிருந்து உள்ளது. இந்த தருணத்தில்., வீட்டின் பின்பக்க வாசல் கதவுகள் மற்றும் படுக்கையறை கதவு., சமையல் அறைக் கதவுகள் அடுத்தடுத்து திடீரென வெடித்து சிதறியது. இதனை கண்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளான மாரிமுத்து., அவருடைய மருமகள் மற்றும் பேரன் ஆகியோருடன் அலறியடித்துடித்துள்ளனர். 

gas, gas cylinder in home,

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்., அவரை மீட்டு வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து சற்று அமைதிப்படுத்தினர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில்., வீட்டில் இருந்த யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும்., வீட்டின் கதவுகள் மட்டும் வெடித்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் இதற்கான காரணம் குறித்து அறிவதற்கு தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில்., சமையலறை அடுப்பில் ஆவி பிடிப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து உள்ள நிலையில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக தண்ணீர் கொத்திக்கொண்டு இருந்துள்ளது. 

இந்த சமயத்தில்., தண்ணீர் பொங்கி பாத்திரத்தில் இருந்து வெளியே வந்த அணைந்துவிட்டது. இதனை அறியாத இவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கவே., கேஸ் வெளியேறி சமையல் அறை கதவு முழுவதும் பரவி., வீட்டின் படுக்கை அறை கதவு மற்றும் ஜன்னல் அனைத்தும் காற்று வெளியே போகாதபடி பூட்டி இருந்ததால்., கேஸ் வெளியேற முடியாமல் வெந்நீருடன் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக கதவுகள் வெடித்து சிதறியதாக கூறியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Chennai house door explodes investigation going on


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->