சிறுமிகளை கடத்தி சென்று நான்கு நாட்கள் விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆட்டோ ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சார்ந்த 16 வயதுடைய சிறுமி மற்றும் 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., தினமும் பள்ளிக்கு சென்று நேரத்துடன் வீடு திரும்பி விடுவது வழக்கம். 

இந்த நிலையில்., கடந்த நான்கு நாட்களாக வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் வீட்டிற்கு வெகு நேரமாகியும் வராததை அடுத்து., அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் இல்லத்தில் சென்று விசாரித்துள்ளனர். 

இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் தேடியலைந்த நிலையில்., பள்ளிக்கு சென்ற பெற்றோர்களுக்கு சிறுமிகள் இருவரும் பள்ளிக்கு காலையில் இருந்து வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில்., காரப்பாக்கம் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த காம கொடூரன் கனகராஜ் (வயது 21) மற்றும் குமார் (வயது 19) ஆகியோர் சிறுமிகளிடம் திருப்பூருக்கு சுற்றுலா செல்லலாம் என்று கூறி திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். 

இரண்டு மாணவிகளையும் அறையில் கடத்தி வைத்து இரவு பகல் பாராது இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பூருக்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து., சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai girl kidnapped and rapped by tirupur police arrest culprit auto drivers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->