பக்கத்து வீட்டுக்காரரை குடும்பத்தோடு சேர்ந்து புலந்துகட்டிய சோகம்.. இறுதியில் அரங்கேறிய பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலூர் கிரமத்தை சார்ந்தவர் ரவி. இதே பகுதியில் மனைவியுடன் வசித்து வரும் நபரின் பெயர் கொளஞ்சி. 

இந்த நிலையில், சம்பவத்தன்று ரவி கொளஞ்சியின் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த கொளஞ்சி திடீரென ஆத்திரப்பட்டு, என் மனைவியிடம் உனக்கு என்ன பேச்சு? என்று கூறியுள்ளார். 

இந்த நேரத்தில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வாய்தகராறாக மாறியுள்ளது. பின்னர் சிறிது நிமிடத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், கொளஞ்சியின் குடும்பத்தினர் ரவியை அடித்துள்ளனர். 

murder,

இதனால் படுகாயமடைந்த ரவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக்க தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் சென்று கொண்டு இருக்கும் போதே ரவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் கொளஞ்சி உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ariyalur man murder police investigation going on


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal