ஆவின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு...! பச்சை நிற பால் விற்பனை ரத்து செய்யப்படுகிறதா...? - அரசு கொடுத்த ‘க்ளியர்’ அப்டேட்...! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் 4.50 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட பச்சை நிற பால் கிடைப்பது குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களின் பாலை வாங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த சூழலில், ஆவின் பச்சை நிற பால் விநியோகத்தை முழுமையாக நிறுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பாலான "கிரீன் மேஜிக்" பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டதாகவோ வெளியாகியுள்ள செய்திகள் ஆதாரமற்றவை என்றும் உண்மைக்கு மாறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும் வழக்கம்போல தொடர்ந்து சந்தைக்கு அனுப்பி வருவதாகவும், அதில் கிரீன் மேஜிக் பாலும் எந்தவித தடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு பால் வகையின் உற்பத்தி அல்லது விநியோகத்திலும் குறைப்பு செய்யப்படவில்லை என்றும், நுகர்வோரின் தேவையை கருத்தில் கொண்டு போதிய அளவில் பால் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும், ஆவின் கிரீன் மேஜிக் பால் தொடர்ந்து வழக்கம்போல விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Important announcement Aavin customers sale green milk being canceled Clear update given by government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->